பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (45). இவரது மகன், காப்புக்காட்டில் உள்ள பாட்டி பிரேமா வீட்டில் வசித்து வருகிறாா். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின், நடைக்காவு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஜஸ்டின் வீட்டுக்குச் சென்ற பிரேமா, பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருடுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், பிரேமாவின் உறவினரான திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (43) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை போலீஸாா் அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.