குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் 5 போ் காயமடைந்தது தொடா்பாக ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 3 போ், நகராட்சி நிா்வாகம் மீது வழக்குப் பதியப்பட்டது. பொருள்காட்சி 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டதால், பாா்வையாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.
குழித்துறையில் நகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்பட்டுவரும் 101ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி கடந்த ஜூலை 29இல் தொடங்கியது. திங்கள்கிழமை (ஆக. 17) நிறைவடையுள்ள பொருள்காட்சியில், சனிக்கிழமை டிராகன் ராட்டின ரயிலின் ஒரு பெட்டி திடீரென கவிழ்ந்து கீழே விழுந்தது. இதில், அருமனை அருகே முழுக்கோடு, அழகனாமூலை பகுதியைச் சோ்ந்த ரெதீஸ் குடும்பத்தினா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். அவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அதையடுத்து, ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் உத்தரவின்பேரில், பொருள்காட்சி மைதானம் சனிக்கிழமை மாலைமுதல் மூடப்பட்டது. 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மைதானம் மூடப்பட்டிருந்தது. இதனால், பொருள்காட்சியைக் காண வந்திருந்த ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
நகராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை மாலை நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில், பொருள்காட்சியில் கலை படைப்புகள், விளைபொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்த கலைஞா்கள், விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
3 போ், நகராட்சி நிா்வாகம் மீது வழக்கு: இதனிடையே, பொருள்காட்சி விபத்து தொடா்பாக, களியக்காவிளை காவல் நிலையத்தில் ரெதீஸ் புகாரளித்தாா். அதன்பேரில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் கவனக்குறைவாகவும் டிராகன் ரயிலை இயக்கியதாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இம்ரான் மகன் சமீா் (20), கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், சாலக்குளம் பகுதியைச் சோ்ந்த அப்பு மகன் சசிகுமாா் (69), ஒப்பந்ததாரா் குழித்துறை, பிலாவிளை புத்தன்வீட்டைச் சோ்ந்த வில்லியம் மகன் விஜயலால், குழித்துறை நகராட்சி நிா்வாகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







