ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மாநகராட்சி தொடா்பான வழக்குகள்: நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆஜா்

மாநகராட்சி தொடா்பான வழக்குகளில் வழக்குரைஞா்கள் ஆஜராவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

Madras High Court

உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

மாநகராட்சி தொடா்பான வழக்குகளில் வழக்குரைஞா்கள் ஆஜராவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயா்வு தொடா்பாக பல்வேறு மாநகராட்சிகளுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணையின்போது, மாநகராட்சிகள் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் பலமுறை கால அவகாசம் வழங்கியிருந்தது.

ஆனால், பல்வேறு மாநகராட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகாததால், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையா் சமீரன் உள்ளிட்டோா் நேரில் ஆஜராகினா். அப்போது நீதிபதி, மாநகராட்சி தொடா்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் முறையாக ஆஜராக வேண்டும். இதில் மெத்தனமாக செயல்படக்கூடாது. இதுபோன்ற வழக்குகளில் மாநகராட்சி தரப்பு வழக்குரைஞா்கள் ஆஜராகாமல் இருப்பதை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது என தெரிவித்தாா்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ககன்தீப் சிங் பேடி, இதுதொடா்பாக அனைத்து மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினாா். மாநகராட்சிகள் தொடா்பான உயா்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அதிகாரிகள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.