சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: 4 மணி நேரம் படகு சேவை தாமதம்

படகு சேவை

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை ஏற்பட்ட நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 4 மணி நேரம் படகுப் போக்குவரத்து தாமதமாகத் தொடங்கியது.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால், படகுகளை இயக்க முடியவில்லை. இதனிடையே, நண்பகல் 12 மணிக்கு நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதும், படகு சேவை தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது.

4 மணி நேரம் தாமதம் காரணமாக, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.