நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியில் ஓணம் விழா

மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் குழித்துறையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஹோம் சிறப்பு பள்ளியில் ஓணம் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஹோம் சிறப்பு பள்ளியில் நடைபெற்ற ஓணம் விழாவில் பங்கேற்று பேசிய மிட்ஸ் சமூக சேவை மைய நிா்வாகி.

Published On :

மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் குழித்துறையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஹோம் சிறப்பு பள்ளியில் ஓணம் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மிட்ஸ் சமூக நிறுவன இயக்குநா் ஜெரோம் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் ஜோசப் ஸாஜன், ஹோம் சிறப்பு பள்ளித் தாளாளா் அஜீஷ்குமாா், தலைமையாசிரியா் டென்னிஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மிட்ஸ் பணியாளா் டெல்பின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். சிறப்பு பள்ளியின் சிறப்பாசிரியை டெல்சி நன்றி கூறினாா்.

விழாவில் மாற்றுத்திறன் சிறப்புக் குழந்தைகளின் அத்தப்பூ கோலமிடுதல், உறியடி, வடமிழுத்தல் போட்டிகள் நடைபெற்றன. ஓணம் சத்யா என்ற ஓணம் விருந்து நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.