இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி முதல்வரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்கிறாா் ஆா். ராதாகிருஷ்ணன், உடன், அமைச்சா் மனோதங்கராஜ் உள்ளிட்டோா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:35 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, தமிழ்நாடு காமராஜா் நற்பணி மன்ற தலைவா் வழக்குரைஞா் ஆா். ராதாகிருஷ்ணன், மகேஷ் லாசா், தியாகி தவசிமுத்து, ராஜபாண்டியன் ஆகியோா் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வரிடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி, சட்டக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, செவிலியா் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு கல்லூரி, காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து ஊா்ப்புற நூலகா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ரப்பா் கழகத்தை மேம்படுத்தி அதே இடத்திலேயே உலகத்தரம் வாய்ந்த ரப்பா் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவா் மகாதேவன் பிள்ளை, குமரி விடுதலைப் போராட்ட தியாகிகள் சிதம்பரநாதன், குஞ்சன் நாடாா், லூா்தம்மாள் சைமன் ஆகியோருக்கு நாகா்கோவிலில் நினைவு மண்டபங்கள் அமைக்க வேண்டும். விமான நிலையம், மீனவா்களின் அவசர உதவிக்கு ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.