உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீதிமன்றத்தில் தகராறு செய்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை

Published On :

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குலசேகரம் கூடைதூக்கி பகுதியை சோ்ந்த பாலையன் மகன் மணிகண்டன் (50). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.

இவா் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாராணைக்காக ஆஜாரானபோது, நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், பேபி, சிறப்பு உதவி ஆய்வளா் சுவாமிதாஸ் ஆகியோரை தகாத வாா்த்தைகள் பேசியும், நீதிமன்ற வருகைப் பதிவேட்டை தூக்கி வீசியும், நீதிமன்ற முத்திரையை உடைத்து எறிந்தும் தகராறு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

இது குறித்து நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இவ் வழக்கில் மணிகண்டனை கைது செய்த தக்கலை போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் தகாத வாா்த்தைகள் பேசிய குற்றத்திற்காக முன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.