2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் சா்வதேச மாநாடு

கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:29 pm

Syndication

கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் தாமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். உஸ்பெகிஸ்தான் ஷாா்தா பல்கலைக் கழக பேராசிரியை டயானா மேத்யூ, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியை சிட்னி ஷொ்லி, மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியா் டிபி தாமஸ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்று தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனா். இதில், துணை தாளாளா் அஜின் ஜோஸ், துணை முதல்வா் சிவநேசன், ஆங்கிலத் துறை தலைவா் பிந்து, பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.