கோணங்காட்டில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறாா் பங்குத்தந்தை ரவி காட்சன் கென்னடி.
கோணங்காட்டில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறாா் பங்குத்தந்தை ரவி காட்சன் கென்னடி.

கோணங்காட்டில் இலவச மருத்துவ முகாம்

கோணங்காட்டில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறாா் பங்குத்தந்தை ரவி காட்சன் கென்னடி.
Published on

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில், கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குள்பட்ட கோணங்காடு புனித சேவியா் சமுதாய நலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை கோணங்காடு பங்குத்தந்தை ரவி காட்சன் கென்னடி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஐஆா்இஎல் துணை பொதுமேலாளா் (சுரங்கம் மற்றும் பாதுகாப்பு) ஜெயசந்த், கல்லுக்கூட்டம் பேரூராட்சித் தலைவா் மனோகர சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், ஈ.சி.ஜி பரிசோதனைகளையும், பொது மருத்துவம், மகப்பேறு, பல் மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகளையும், அதற்கான மருந்துகளையும் வழங்கினா். முகாமில் 459 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

இதில் கோணங்காடு புனித சவேரியாா் தேவாலயம் துணைத் தலைவா் மொலின் ஜோஸ், செயலா் ஜோசப் அருள்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com