சமத்துவ பொங்கல் கொண்டாட ஆட்சியா் அழைப்பு

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் நாளில் சமத்துவ பொங்கல் கொண்டாட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் முதல் நாளன்று சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாகவும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு

வருகிறது. இந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகா்கோவில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கிராம ஊராட்சிகளில் 12, 13 ஆகிய தினங்களில் சுயஉதவிக் குழுக்களுக்கிடையே கோலப் போட்டி நடத்தி வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் 14 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. மேலும் சமத்துவ பொங்கல் அன்று கபடி, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் சமூக வேறுபாடுகளை மறந்து தங்கள் பகுதிகளில் நடைபெறும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com