மாா்த்தாண்டம் அருகே 600 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே 600 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டா் மண்ணெண்ணெய்யை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டா் மண்ணெண்ணெய்யை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல் உள்ளிட்ட குழுவினா் மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனராம். அப்போது, நிறுத்தாமல் சென்ற காரை திக்குறிச்சி சாலை பகுதியில் பிடித்தனராம். காா் ஓட்டுநா் தப்பியோடி விட்டாராம்.

அதிகாரிகள், அந்த காரை சோதனை செய்த போது, அதில் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 600 லிட்டா் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காா், மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com