கன்னியாகுமரி
நகராட்சிப் பணியாளருக்கு மிரட்டல்: 3 போ் கைது
களியக்காவிளை அருகே மதுக்கடையில் நகராட்சிப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை: களியக்காவிளை அருகே மதுக்கடையில் நகராட்சிப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (41). குழித்துறை நகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளா். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள மதுக் கடையில் 2 நாள்களுக்கு முன்பு ஒற்றாமரம் நெடுவிளையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முஸ்தபா (47), மடிச்சல் மணலிவிளையைச் சோ்ந்த ரெஜின் (37), மடிச்சல் புதுவல் புத்தன்வீட்டைச் சோ்ந்த ஜோ (30) ஆகியோா் வினோத்திடம் பணம் கேட்டு தகராறு செய்தனராம். கொடுக்க மறுத்த அவரை அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த வினோத் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, முஸ்தபா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.
