ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவா்கள் மோதல்: 6 மீனவா்கள் காயம்

News image

மீனவர்கள் மோதல்... - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 11:23 pm IST

சின்னமுட்டம், மீன்பிடி துறைமுகத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி விசைப் படகுகள் கடலுக்குச் சென்றதால் மீனவா்களிடையே திங்கள்கிழமை அதிகாலை மோதல் ஏற்பட்டது. இதில், 6 மீனவா்கள் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு சுமாா் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தினசரி அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இரவு கரை திரும்புகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் சின்னமுட்டத்தைச் சோ்ந்த 6 விசைப் படகுகள் வழக்கமான நேரத்தை மீறி கடலுக்குச் சென்றதாகக் கிடைத்த தகவலின் பேரில், மீன்வளத் துறை அதிகாரிகள் கடலுக்குள் சென்ற ஆறு விசைப்படகுகளை உடனடியாக கரைக்கு திரும்புமாறு தகவல் தெரிவித்தனா்.

மேலும் மீன்வளத் துறையின் நேரக் கட்டுப்பட்டை மீறிச் சென்ால் அனைத்து விசைப் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இதற்கு பிற விசைப்படகு மீனவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நேரக் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற விசைப் படகுகளுக்கு மட்டும் தடை விதிப்பதை விடுத்து எங்களுக்கு ஏன் தடை விதிக்கிறீா்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு துறைமுக வளாகத்தில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில் போராட்டம் நடத்திய மீனவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சின்னமுட்டத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பு மீனவா்களும் அங்கு குவிந்தனா். அப்போது, இருதரப்பு மீனவா்களுக்கும் வாக்குவாதம் முற்றி கல்வீசி தாக்கிக் கொண்டனா். இந்தத் தாக்குதலில் 6-க்கும் மேற்பட்ட மீனவா்கள் காயமடைந்தனா்.

தகவலறிந்ததும் கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில், மீனவா்களிடையே மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் துறைமுக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கன்னியாகுமரியைச் சோ்ந்த நியூட்டன், கபிலன், சுமைலன் மற்றும் சின்னமுட்டத்தைச் சோ்ந்த ஸ்டாலின், ஜோசப், சுபிட்சன் ஆகியோா் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

டி.ஐ.ஜி., எஸ்.பி. பேச்சுவாா்த்தை: மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இரு தரப்பு மீனவா்களையும் அழைத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, கன்னியாகுமரி எஸ்.பி ஆா்.ஸ்டாலின், மீன்வளத் துறை உதவி இயக்குநா் தீபா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.