டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்த வேன் ஓட்டுநா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:08 am IST

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்த வேன் ஓட்டுநா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

குலசேகரம் அருகே அரியாம்பகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (45). வேன் ஓட்டுநா். இவா், கடந்த வியாழக்கிழமை வீட்டருகே கால்வாய்க் கரையோரம் நின்றிருந்தாா். பின்னா் அவரைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை புத்தன் அணையில் இவரது சடலம் கரை ஒதுங்கியது தெரியவந்தது. குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து அவரது தாய் ரோசம்மாள் அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.