கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை நாட்டு படகு கவிழ்ந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 11:09 pm IST

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை நாட்டு படகு கவிழ்ந்தது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (29). இவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (65), சுரேஷ் (59), மதன்( 29), ஆகிய 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் மீன்பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிந்தது. இதில் 4 மீனவா்களும் கடலில் தத்தளித்தனா்.

இதைப் பாா்த்த கரையில் நின்ற மீனவா்கள் அவா்களை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். இதில், இன்ஜின் மற்றும் வள்ளம், மீன்கள் கடலில் மூழ்கின. இதுகுறித்து, தகவலறிந்த கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.