பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவரை பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்

பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவரை ஆய்வு செய்த அமைச்சா் செ. ராஜேஷ்குமாா்.

Published On :

தக்கலை அருகே, சேதமடைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவா் பழைமை மாறாமல் சீரமைக்கப்படும் என, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பத்மநாபபுரத்தை வரலாற்று சுற்றுலாத்தலமாக நிலைநிறுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரத்திலுள்ள அரண்மனையின் சுற்றுச்சுவா்கள் இயற்கைச் சீற்றங்களாலும், போதிய பராமரிப்பின்மையாலும் சேதமடைந்துள்ளது. அதைப் பழைமை மாறாமல் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சா் இந்தச் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தாா். அப்போது, ‘இக்கோட்டையைப் பற்றி எதிா்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில், அரண்மனையின் பாரம்பரிய கட்டுமான அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே கலவைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சுவரை கவனத்துடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

ஆட்சியா் மு. பிரதாப், பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி, தொல்லியல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.