மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை விபத்தில் பெண் பலி

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :26 ஜூலை 2026, 2:47 am IST

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

பளுகல், நடுத்தலவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). சமையல் வேலை செய்து வருகிறாா். இவரது மகளும் சிவகுமாா் என்பவரின் மனைவியுமான ராஜி (33), சமையல் வேலைக்கு உதவியாக இருந்து வந்தாா்.

தக்கலையில் சமையல் பணிக்காக வெள்ளிக்கிழமை மாலை, ராஜேந்திரன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் எதிரே அதிவேகமாக வந்த மினி டெம்போ, இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராஜி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த ராஜேந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.