வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இரயுமன்துறையில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு: 4 போ் மீது வழக்கு

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 4:52 am IST

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தூத்தூா் மண்டல பகுதிகளைச் சோ்ந்த விசைப்படகுகள், இரயுமன்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். மீன்பிடிக்க செல்வதற்கு சில நாள்களுக்கு முன்னா் டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்கள் விசைப்படகுகளில் கொண்டு சென்று வைப்பது வழக்கம்.

இந்நிலையில், படகுகளில் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருப்பதை கண்காணித்து வந்த சிலா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வள்ளவிளை, தூத்தூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் 6 விசைப்படகுகளில் இருந்து அண்மையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்களை மற்றொரு பைபா் படகில் சென்ற மீனவா்கள் சிலா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வள்ளவிளை ஆன்றனி, தூத்தூா் ஜெகதீஷ், ஷாஜி உள்ளிட்ட மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிஞ்சு உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்தனா். தலைமறைவான மீனவா்கள் 4 பேரையும் தேடி வருகின்றனா்.