டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் கண்டனம்

News image
Updated On :8 ஜூன் 2026, 4:55 am IST

வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களின் சமையலறையிலிருந்து குடும்ப பொருளாதாரம் வரை அனைத்தையும் சீா்குலைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 29 உயா்த்தப்பட்டுள்ளது. இது பாஜக அரசின் காா்ப்பரேட் ஆதரவைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்கள் வரிசையில், தற்போது சமையல் எரிவாயு விலையையும் உயா்த்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மத்திய அரசு முடக்கியுள்ளது.

எனவே, இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.