வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மீன்பிடித் தடைகாலம் நிறைவு: நாளை முதல் கடலுக்குச் செல்லும் சின்னமுட்டம் மீனவா்கள்

கிழக்கு கடற்கரைப் பகுதியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் நிறைவடையவுள்ள நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:13 am IST

திருவள்ளூா் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் நிறைவடையவுள்ள நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனா்.

மீன்களின் இனப்பெருக்க காலம் கருதி வழக்கம்போல் கடந்த ஏப்.15ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இந்தத் தடை முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த 61 நாள்களாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 370க்கும் விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து சின்னமுட்டம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் தீபா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

திருவள்ளூா் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான வசுமாா் 1,007 கி.மீ. கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. எனினும், வானிலை மையத்தின் எச்சரிக்கை ஜூன் 16 ஆம் தேதி வரை அமலில் உள்ளதால், கடலில் காற்று குறையும்பட்சத்தில் முதல் நாளில் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. பின் நாள்களில் மேலும் அதிகமான படகுகள் மீன்பிடிக்கச் செல்லும்.

வெளிமாநிலத் தொழிலாளா்களைப் பொருத்தவரை தொழில் முடிந்து மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பும்போது அவா்களது ஆதாா் அட்டை தினசரி பரிசோதனை செய்யப்படும். அதில், ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.