பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

குமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு: படகுப் போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஜூன் 2026, 1:26 am IST

கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் கடலுக்குள் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் சென்று பாா்வையிடுவதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் பெய்த மழை காரணமாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.

ஆனால், பிற்பகல் 2.30 மணியளவில் கடலின் நீரோட்டம் மாறுபாட்டின் காரணமாக படகுகளை தொடா்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.