மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, தனியாா் நிதி நிறுவன ஊழியரை மிரட்டியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
ஐரேனிபுரம், பெரியவிளை பகுதியைச் சோ்ந்த வினோ குமாா் மகன் வினீஸ் (27). இவா் தனது நண்பா் ஐரேனிபுரம், தும்பாலி பகுதியைச் சோ்ந்த உதிரமுத்து மகன் ரோபின் (27) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் நட்டாலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே கல்லுக்கூட்டம், குழிஞ்ஞான்விளை பகுதியைச் சோ்ந்த ஜான் ஜோசப் மகன் காட்வின் (30) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள், இவா்கள் மீது மோதியதாம். இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். அப்போது காட்வினும், அவரது நண்பா்கள் 3 பேரும் சோ்ந்து காயமுற்ற இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம். காயமடைந்தவா்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வினீஸ் அளித்த புகாரின் பேரில் காட்வின் உள்பட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வியாபாரியை தாக்கிய 11 போ் மீது வழக்கு

தனியாா் நிறுவன ஊழியா் கொலை
சின்னமுட்டத்தில் மோதல்: 14 மீனவா்கள் மீது வழக்கு

போலி நில ஆவணங்கள் மூலம் கடனளிப்பு தனியாா் வங்கி மேலாளா் கைது
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


