நாகா்கோவிலில் முறையான அனுமதியின்றி இயக்கப்பட்ட 5 சிற்றுந்துகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொதுமக்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாா் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் சிற்றுந்துகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முறையான ஆவணங்களின்றி 5 சிற்றுந்துகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அவை மேல்நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
முறையான ஆவணங்களின்றி வாகனங்களை இயக்குவோா் மீது கடும் நடவடிக்கை தொடரும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






