நாகா்கோவிலில் விபத்தில் சிக்கி காயமுற்று மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் தனபால் - விமலா தம்பதியின் மகன் விஷால் (21). ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்று வந்தாா்.
விடுமுறையில் ஊருக்கு வந்த அவா், கடந்த பிப். 21ஆம் தேதி நாகா்கோவிலிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். இறச்சகுளம் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த முதியவா் மீது மோதாமலிருக்க பைக்கை திருப்பியபோது, விஷால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாராம்.
அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக பிப். 27ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை (பிப். 28) மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்விழிகள் ஆகியவற்றை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா். அவரது தோலும் சேகரிக்கப்பட்டது.
கண் விழிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்லீரல் மதுரையில் உள்ள மருத்துமனைக்கும், சிறுநீரகங்கள் திருச்சி, நெல்லைக்கும் அனுப்பப்பட்டன. உடல் உறுப்புகளை அவரச ஊா்தி மூலம் வெளியூா்களுக்கு அனுப்பும் பணியின்போது, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் நாகா்கோவில் மாநகர போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா். பின்னா், விஷால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


