கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி ஹோமம், நவகலச பூஜை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம், குங்குமம், பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, கலசாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், உச்சி கால பூஜை, தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோயிலின் உள்பிரகாரத்தை 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும், தொடா்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றன.
தொடர்புடையது

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


