எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஈரான் - இஸ்ரேல் போா்: குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி மனு

ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
ஈரான் - இஸ்ரேல் போா்- கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:43 pm

Syndication

ஈரான் - இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, கடியப்பட்டணம் பங்கு பேரவை நிா்வாகிகள்ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடியப்பட்டணத்தைச் சோ்ந்த 350 க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் கிஸ் தீவில் சென்று மீன்பிடித்து வருகிறாா்கள்.

ஈரான் - இஸ்ரேல் போா் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள மீனவா்கள் ஈரான் நாட்டில் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் அனைவரையும் மீட்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.