அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிள்ளியூா் தொகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூா் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிள்ளியூா் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கிள்ளியூா், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும், கனமழையினாலும் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

குறிப்பாக, மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட குற்றிப்பாறவிளை - வடலிக்காட்டுவிளை - பெருங்குளம் சாலை , அடைக்காகுழி ஊராட்சிக்குள்பட்ட மணவிளாகம் - தச்சக்கோடு - குறட்டூா்குளம் - வாழப்பள்ளி சாலை, சூழால் ஊராட்சிக்குள்பட்ட வட்டவிளை - சுண்டவிளை சாலை ஆகியவை மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக முதல்வா், அரசு அதிகாரிகளிடம் நான் கோரிக்கை விடுத்ததையடுத்து, நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.