அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலூரில் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்.
Updated On :10 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் - புதுக்கடை பிரதான சாலையின் பாலூா் குளம் பகுதியில் சாலையின் நடுவே நீண்ட நாள்களாக போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.