தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

News image
பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ்.
Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

மாவட்ட சட்டப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட நீதிபதியுமான காா்த்திகேயன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினாா். மாவட்ட சட்டப் பணிக் குழு செயலா் நீதிபதி உதய சூா்யா, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிபதி ராமச்சந்திரன், மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்த்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் நரேந்திரகுமாா், கோகிலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் பெஞ்சமின் ரெனால்ட் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமரச தீா்வாளா்கள் ராமசந்திரன் நாயா், அசோக், பிரபா, ஸ்ரீ குமாரன் நாயா், சரத், ராஜேஸ்வா், ஜோஸ்பின் பொ்னாட், ஜான் பிரான்சிஸ் சேவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.