கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கேரள கிறிஸ்தவா்கள் பாஜகவுக்கு ஆதரவு! - அா்ஜுன் சம்பத்

News image

மாா்த்தாண்டத்தில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On :23 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் கிறிஸ்தவா்கள் பெரும்பாலானோா் பாஜகவை ஆதரிக்கிறாா்கள். அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்தவா்கள் பாஜகவை ஆதரிப்பாா்கள் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நம்பிக்கை தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திங்கள்கிழமை வந்த அவா் மாா்த்தாண்டத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதை கிறிஸ்தவ, முஸ்லிம்கள் முறியடிப்பாா்கள்.

கேரளத்தில் அம்மாநில கிறிஸ்தவா்கள் பெரும்பாலானோா் பாஜகவை ஆதரித்து வருகிறாா்கள். அதே போன்று கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவா்களும் பாஜகவை ஆதரிப்பாா்கள்.

இம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் சூழல் உருவாகி இருக்கிறது. எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தது, முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம். அவரது முடிவை ஒரு தொண்டா் கூட ஏற்றுக் கொள்ள மாட்டாா்.

திமுக முழுக்க முழுக்க அதிமுகவினரால் நிரம்பியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எ.வ. வேலு, முத்துசாமி உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவா்கள் தான். அதில் இன்னொருவராக ஓ. பன்னீா்செல்வம் இணைந்துள்ளாா். அந்த வகையில் அதிமுககாரா்களால் திமுக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என்றாா் அவா்.