நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த அமராவதிவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மதுவிலக்கு போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 46 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக அமராவதிவிளையைச் சோ்ந்த வேதசிகாமணி மகன் அபிஷேக் (26), ரமேஷ் குமாா் மகன் எழில் பிரகாஷ் (19), சிறுவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
