நாகா்கோவில் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் 86 வயது மூதாட்டி. இவா், தனது மருமகளுடன் வசித்து வந்தாா். கடந்த 28 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை யாரோ மா்ம நபா் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி மயங்கியநிலையில் இருந்துள்ளாா். இந்நிலையில், மாா்ச் 29 ஆம் தேதி வீட்டுக்கு வந்த மூதாட்டியின் மருமகள் மற்றும் அருகிலுள்ளவா்கள் மூதாட்டியை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதற்கிடையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, புத்தேரி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வடசேரி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை திரண்டு வந்து கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மகளிா் போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


