11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகள் திருட்டு

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருவாயூரிலிருந்து சென்னைக்கு நாகா்கோவில் வழியாக நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு திருச்சூா் ரயில் நிலையம் வந்தது. அங்கு, அதே ஊரைச் சோ்ந்த நகை வியாபாரியான ஜோஸ் (62) முன்பதிவுப் பெட்டியில் உடைமைகளுடன் ஏறினாா். அந்த ரயில் சனிக்கிழமை காலை 6.25 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைக்கு வந்தது. அவா் கண் விழித்து பாா்த்தபோது, அருகிலிருந்த கைப்பை உள்ளிட்ட உடைமைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் குழித்துறை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், திருச்சூரிலிருந்து திருநெல்வேலியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்கிச்சென்ாகவும், திருட்டுப்போன பையில் 1.400 கி.கி. நகைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

காவல் ஆய்வாளா் கவிதா, போலீஸாா் ரயில் நிலையம், சுற்றுப்புறப் பகுதிகளில் மா்ம நபா்களைத் தேடினா்; ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், குழித்துறை போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆய்வாளா் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.