‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் கொடிமரத்தில் விழா கொடியேற்றும் அா்ச்சகா்கள்.

Updated On :22 மே 2026, 6:09 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோயிலில் அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு கொடிப்பட்டத்தை வெள்ளிப் பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பஞ்ச வாத்தியங்கள் முழங்க மாத்தூா் மணலிக்கரை மட தந்திரி சஜித் சங்கரநாராயணரூ விழா கொடியேற்றினாா்.

இதில், நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கோயில் மேலாளா் ஆனந்த், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், முன்னாள் துணைத் தலைவா் பா.தம்பித்தங்கம், முன்னாள் கவுன்சிலா் டி.தாமஸ், குமரி கிழக்கு தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.மாதவன், மாவட்ட பாஜக செயலா் சி.எஸ்.சுபாஷ், பகவதியம்மன் கோயில் பக்தா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா் நாகப்பன், கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தா்கள் சங்க செயலா் பி.முருகன், மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி பொருளாளா் பி.பகவதியப்பன், பாஜக ஊடகப் பிரிவு செயலா் குமரி சிவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி ஆகியவை நடைபெறும்.

விழாவில் 9 ஆம் நாளான மே 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இதில், கேரளம், தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். மே 30-ஆம் தேதி காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.