தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளி கைது

கொல்லங்கோடு அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:16 am IST

கொல்லங்கோடு அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (49). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை, இவரது வீட்டருகே நின்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் ஸ்டீபன் பாலியல் செய்கை சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தப்பியோடினாராம்.

இது குறித்து மாணவியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் லட்சுமி பிரபா, போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்டீபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.