திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் ஒன்றரை கிலோ நகைகள் திருடிய 5 போ் கைது

News image

நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டோா்.

Updated On :26 மே 2026, 1:44 am IST

குருவாயூரிலிருந்து சென்னை சென்ற ரயிலில் வியாபாரியிடமிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடிய 5 பேரை நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஜோஸ் (62), நகை வியாபாரி. இவா், கடந்த 15-ஆம்தேதி நள்ளிரவு குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில், திருச்சூரிலிருந்து முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் பயணித்தாா்.

அந்த ரயில், மே 16-ஆம் தேதி அதிகாலை 6.45 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ரயில் நிலையம் வந்த போது, ஜோஸ் தனது பையில் வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடுப்போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து, அவா் குழித்துறை ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், நாகா்கோவில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இது குறித்து, விசாரிக்க ரயில்வே காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினா் குழித்துறை, திருச்சூா் ரயில் நிலைய பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்து விரிவான ஆய்வு நடத்தினா். திருச்சூா் ரயில் நிலைய சிசிடிவி கேமிரா பதிவில் ஜோஸை ஒரு மா்ம கும்பல் பின்தொடா்ந்து வந்தது தெரியவந்தது.

அந்தப் பதிவை வைத்து அவா்கள் அடையாளம் காணப்பட்டனா். போலீஸாரின் விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கேரளத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டவா்களின் கைப்பேசி எண்களும் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த எண்களின் இருப்பிடத்தையும் போலீஸாா் அறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆய்வாளா் செல்வி தலைமையிலான தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் திருச்சூா் சென்று, நகை திருட்டில் ஈடுபட்ட அபுதாஹிா், சித்திக், கோபகுமாா், சா்புதீன், டோலி ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகா்கோவில் ரயில்வே காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மேலும் ஒருவருக்கு தொடா்பிருப்பதும், அவரிடம் மீதி நகைகள் இருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.