களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

களியக்காவிளை அருகே கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

களியக்காவிளை அருகே கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியிலிருந்தனா். அப்போது, தாா்ப்பாயால் மூடப்பட்டு, சிமென்ட் பாரம் ஏற்றிச் செல்வதுபோல வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான சிதறால் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சிபின் (33) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகரின் பரிந்துரை, ஆட்சியா் மு. பிரதாப்பின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், சிபினை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கனிமவளக் கடத்தலில் ஈடுபடுவோா் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாவட்ட காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.