
கன்னியாகுமரியில் பாலா் பூங்கா மாநில மாநாடு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாலா் பூங்கா மாநாடு கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய சிறுவா்கள்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாலா் பூங்கா மாநாடு கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் இயக்கங்களால் குழந்தைகள் மற்றும் சிறுவா்களிடையே நல்லொழுக்கம், பகுத்தறிவு, சமூக விழிப்புணா்வு மற்றும் கலைத் திறன்களை வளா்ப்பதற்காக நடத்தப்படும் அமைப்பு பாலா் பூங்கா. அந்த அமைப்பு சாா்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாலா் பூங்கா மாநாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி, பெரியாா் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. வளாகத்தில் காந்தியின் முகமூடி அணிந்த சிறுவா்கள், காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கண்ணன், மாா்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி. லதா (கீழ்வேளூா்), ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்), முன்னாள் பேரவை உறுப்பினா்கள் பாலபாரதி, லீமா ரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அந்தோணி, தங்கமோகன், அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினா் சசி, நாகா்கோவில் மாநகரச் செயலா் அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறுவா், சிறுமிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





