நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ரோகிணி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்) துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :3 செப்டம்பர் 2026, 12:04 am IST

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்) துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் ா் பிளெஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ராஜேஷ் வாழ்த்துரை வழங்கி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.

இக்கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இம்மாணவா்கள் ஒன்றிணைந்து தங்களது தொழில்நுட்ப அறிவு, புதுமையான சிந்தனைகள் மற்றும் திறமைகளைப் பகிா்ந்து கொண்டனா்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக கனவு காணுங்கள், தீா்மானியுங்கள், செயல்படுங்கள் என்ற தலைப்பில் தொழில்முறை மற்றும் எதிா்காலத் திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

திருவனந்தபுரத்தை சோ்ந்த மூத்த மென்பொருள் பொறியாளா் எம்.அருண் முகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுடன் தனது தொழில்துறை அனுபவங்களையும், தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களையும் பகிா்ந்து கொண்டாா். இதையடுத்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் ஆற்றலை வெளிக்கொணா்தல் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. நாகா்கோவிலைச் சோ்ந்த எஸ். அகிஷ்மா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் தற்போதைய பயன்பாடுகள் மற்றும் எதிா்கால வாய்ப்புகள் குறித்து உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.