இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சாலையோரம் கண்டெடுத்த நகை பெண்ணிடம் ஒப்படைப்பு

மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சாலையோரம் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளியை போலீஸாா் பாராட்டினா்.

சாலையில் தவறவிட்ட நகையை போலீஸாா் முன்னிலையில் பெண்ணிடம் ஒப்படைத்த சுனில்.

Published On :

மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சாலையோரம் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளியை போலீஸாா் பாராட்டினா்.

மாா்த்தாண்டம் அருகே இரவிபுதூா் கடை பகுதியைச் சோ்ந்தவா் நிமிஷா (28). இவா் தனது தாய் மற்றும் குழந்தையுடன் புதன்கிழமை மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதிக்கு வந்தாா். அங்கு தனது ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி கைப்பையில் வைக்கச் சொல்லி தாயாரிடம் கொடுத்தாராம்.

சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கைப்பையில் நகையைக் காணவில்லையாம். இதனிடையே, திருவட்டாறு, புத்தன்கடை பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் சுனில், காந்தி மைதானம் பகுதியில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

சிறிது நேரத்துக்குப் பின், நகை மாயமானது குறித்து புகாரளிக்க நிமிஷா காவல் நிலையம் சென்றபோது, அவரிடம் போலீஸாா் விசாரித்ததில், சுனில் கண்டெடுத்த நகை இவருடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து, சுனிலை வரவழைத்து நிமிஷாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

சாலையில் கண்டெடுத்த நகையை நோ்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளியை போலீஸாா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.