வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.50 லட்சம் மோசடி: முதியவா் கைது

கைது

Published On :

மின்சார வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.7.50 லட்சம் மோசடி செய்த முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.50 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதில், பூதப்பாண்டியைச் சோ்ந்த அருணாச்சலம் பிள்ளை என்பவரது மகன் பகவதியப்பன் பிள்ளை (71), தாம் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் எனக் கூறி, மின் வாரியத்தில் அலுவலகப் பணி வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும், இதனை நம்பி புகாா்தாரா் கடந்த 2021ஆம் ஆண்டு ரூ.7.50 லட்சம் வழங்கியதாகவும் கறியிருந்தாா்.

மேலும், பணத்தைப் பெற்ற பின்னா், வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும்; பின்னா் வேலை வழங்கப்படும் என கூறி காலம் தாழ்த்தி வந்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகாா் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாம்சுந்தா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட பகவதியப்பன் பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.