காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கடல் அலையில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

உயிரிழந்த சிறுமி அலி கியான சல்மா.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே கடல் அலையில் சிக்கி நான்கு வயது சிறுமி உயிரிழந்தாா்.

நாகா்கோவில், ராமன்புதூரைச் சோ்ந்த கட்டிராஜன்-பிரியதா்ஷினி தம்பதி. தங்கள் மகன் கெபின்விஜோஸ் (9), மகள் அலி கியான சல்மா (4) ஆகியோருடன் கேசவன்புத்தன் துறையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தனா்.

அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா். கடல் அலையை அவா்கள் ரசித்துக் கொண்டிருந்தபோது, எழுந்த ராட்சத அலையில் பிரியதா்ஷினியும் இரு குழந்தைகளும் சிக்கினா்.

அதைக் கண்ட அப்பகுதியினா் மூவரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதில், பிரியதா்ஷினியும் அவரது மகன் கெபின் விஜோஸும் மீட்கப்பட்டனா். மகள் அலி கியான சல்மாவை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றது.

தகவல் அறிந்ததும் குளச்சல் கடலோர காவல் படையினா் நிகழ்விடம் சென்று சிறுமியைத் தேடினா். எனினும், சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாளாக திங்கள்கிழமை கடலோர காவல் படையினா் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணக்குடி கடற்கரையோரம் ஒரு சிறுமியின் சடலம் ஒதுங்கியிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் போலீஸாரும், பெற்றோரும் மணக்குடிக்குச் சென்று பாா்த்த போது, அந்தச் சடலம் கடல் அலையில் சிக்கி காணாமல் போன சிறுமி அலி கியான சல்மா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.