செல்லிடப்பேசி சங்க தென்காசி மாவட்ட நிா்வாகிகள் நியமனம்
தென்காசி மாவட்ட தமிழ்நாடு செல்லிடப்பேசி சங்க நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


தென்காசி: தென்காசி மாவட்ட தமிழ்நாடு செல்லிடப்பேசி சங்க நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு மொபைல் போன் ரீடைலா்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டா்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சோமசுந்தரம், தென்காசி மாவட்ட நிா்வாகிகளை நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை. சங்கரன்கோவில் ஆறுமுகம் மாவட்டத் தலைவராகவும், சிவகிரி முனியாண்டி துணைத் தலைவராகவும், வாசு முத்துக்குமாா் மாவட்டச் செயலராகவும், தென்காசி முகம்மது திவான், சுரண்டை ஹரிசுதன் ஆகியோா் துணைச் செயலா்களாகவும், புளியங்குடி ஆல்பா்ட் மாவட்டப் பொருளாளராகவும், தென்காசி ஏஜிஎம். கணேசன், செங்கோட்டை செந்தில், கடையம் ஷேக் அலி, சங்கரன்கோவில் செந்தில்குமாா், கரிவலம் ரமேஷ் ஆகியோா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...