சாம்பவா் வடகரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தா்கள்.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பதினெட்டு படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் மண்டல பூஜை கொடியேற்றம் டிச.16ஆம் தேதி நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் 18 படி பூஜை நடைபெற்றது.

இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை சுவாமி ஐயப்ப சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com