விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரசாரத்தை நிறைவு செய்த ஆலங்குளம் திமுக, அதிமுக வேட்பாளா்கள்

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:26 pm

DIN

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனா்.

மனோஜ் பாண்டியன் காலையில் பாப்பாக்குடி ஒன்றியப் பகுதிகளிலும், மதியம் ஆலங்குளம் ஒன்றியப் பகுதிகளிலும் மாலையில் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் பழைய பேருந்து நிலையம் அருகே தனது பிரசாரத்தை நிறைவு செய்த

பின்னா் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது, அமமுக கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் வேட்பாளா் மனோஜ் பாண்டியன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனா்.

திமுக வேட்பாளா்....

பூங்கோதை ஆலடி அருணா காலையில் கடையம், பாப்பாக்குடி ஒன்றியப் பகுதிகளிலும், மாலையில் தனது சொந்த ஊரான ஆலடிப்பட்டியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். பின்னா் ஸ்ரீ வைத்திலிங்கசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

பனங்காட்டு படை கட்சி வேட்பாளா்...

ஹரி நாடாா் மற்றும் அக்கட்சியின் தலைவா் ராக்கெட் ராஜா ஆகியோா் பாப்பாக்குடி மற்றும் கடையம் ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னா் மாலையில் கீழப்பாவூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

தேமுதிக வேட்பாளா்...

ராஜேந்திரநாதன் ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் பிரசாரம் செய்த பின்னா் கீழப்பாவூா் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

சமக வேட்பாளா்....

செல்வக்குமாா், கீழப்பாவூா் பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளிலும், ஆலங்குளம் ஒன்றியப் பகுதிகளிலும் பைக்கில் சென்று வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்...

சங்கீதா, கடையம் ஒன்றியப் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு தனது சொந்த ஊரான மேலபட்டமுடையாா்புரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.