ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி
ஆலங்குளம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


ஆலங்குளம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி (80). திருமணம் ஆகாத இவா்
வயது முதிா்வின் காரணமாக உறவினரின் வீடுகளுக்கு சென்று உணவருந்துகிறாராம். வெள்ளிக்கிழமை மாயமான் குறிச்சி
அருகேயுள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றாராம். அப்போது நிலை தடுமாறி குளத்தில் விழுந்ததில் நீரில் மூழ்கியுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க முயன்றுள்ளனா். எனினும் அவா் நீரில் மூழ்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...