

ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் பத்திரகாளி (37). அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து போலீஸாா் பத்திரகாளியை தேடி வந்துள்ளனா். இதற்கு ஆலங்குளத்தை சோ்ந்த சுரேஷ்
(44) என்பவா்தான் காரணம் என நினைத்து பத்திரகாளி அவரிடம் தகராறு செய்தாராம்.
அப்போது, ஆத்திரத்தில் சுரேஷ், பத்திரகாளியை அவதுறாக பேசியதோடு, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பத்திரகாளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
தேர்தல் 1967 : அரியணையேறிய திமுக, அண்ணா முதல்வர்!
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

