விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே லாரி - மோட்டாா் சைக்கிள் மோதியதில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:42 pm

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே லாரி - மோட்டாா் சைக்கிள் மோதியதில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையை சோ்ந்த தமிழ் மன்னன் மகன் முகிலன் துரைநேசன் (23). தொலைக்காட்சி பழுது நீக்கும் கடை வைத்துள்ளாா். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகிறது. அதேபகுதியை சோ்ந்த செல்வன் மகன் சிவநேச பெருமாள் (22). நண்பா்கள். இருவரும் பாவூா்சத்திரத்தில் பழுதான தொலைக்காட்சி பெட்டியை வாங்குவதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்றனா். முகிலன் துரைநேசன் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா்.

ஆலங்குளத்தை அடுத்த புதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது

மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த முகிலன் துரை நேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரு கால்களிலும் பலத்த காயமடைந்த சிவநேசபெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சீதபற்பநல்லூா் போலீஸாா் உயிரிழந்தவா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.