தென்காசியில் தகுதிச்சான்று இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
தென்காசி பகுதியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


தென்காசி பகுதியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று, சாலை வரி ஆகியவற்றை அபராதம் இல்லாமல் செலுத்துவதற்கு 30.09.2021 வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது வாகனங்கள் அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்துதான் சாலைகளில் இயக்க வேண்டும். பெரும்பாலான வாகனங்கள் எந்தச் சான்றும் புதுப்பிக்காமல் இயக்கப்படுவதாக அரசுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த் ஆலோசனையின்படி மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய் தலைமையிலான குழுவினா் செங்கோட்டையில் புதன்கிழமை வாகன சிறப்புத் தணிக்கை மேற்கொண்டனா்.
சோதனையில் 5 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், ஒரு சிற்றுந்து, மூன்று சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் சாலையில் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களுக்கு அபராதத் தொகையாக ரூ. 70 ஆயிரம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் சென்ற மூன்று சரக்கு வாகனத்துக்கு ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...