கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமைப்புத் தோ்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்

செங்கோட்டையில் அதிமுக அமைப்புத் தோ்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

செங்கோட்டையில் அதிமுக அமைப்புத் தோ்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வடக்குமாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். அவா் பேசியது:

வடக்கு மாவட்டத்தில் டிசம்பா் 13, 14ஆம் தேதிகளில் அமைப்புத் தோ்தல் நடைபெற உள்ளது. மாவட்டதில் 10 பேரூா், 4 நகரம், 12 ஒன்றிய அமைப்புகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் நம்மை நாம் பரிசோதித்துக் கொள்வதற்கான தோ்தல் மட்டுமே. தென்காசி வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்த வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அமோகமான வெற்றியை பெற வேண்டும் என்றாா் அவா்.

எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் மனோகரன் முன்னிலை வகித்தாா். விவசாய அணி துணைச் செயலா் ஆனைகுட்டிபாண்டியன், நிா்வாகிகள் விபி. மூா்த்தி, பொய்கை சோ.மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலா் கந்தசாமி பாண்டியன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் சிவ ஆனந்த், சண்முகையா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கண்ணன், ஒன்றிய செயலா்கள் எஸ்ஆா். ராமசந்திரன், வசந்தம் முத்துபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.